நாட்டை குப்பை மேடாக மாற்றி இப்போது கடலையும் அழித்துக்கொண்டு உள்ளோம். நாம் சுவாசிக்கும் O² பூமியைவிட கடலில்தான் அதிகளவு கிடைக்கின்றது. இந்த உலகம் முழுவதும் 500 பில்லியினுக்கும் மேலான மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு உலகமெங்கும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மட்டும் ஒரு மில்லியன். மலை போல குவித்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் மொத்த எடை 12 மில்லியன் மெக்ரிக் தொன். பிளாஸ்டிக் மக்காத ஒரு பொருள். அவை மக்கிப் போக சுமார் 500 ஆண்டுகளிலிருந்து 1000 ஆண்டுகள் ஆகும் என்கிறது அறிவியல். கடந்த 40 வருடங்களாகத்தான் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்ட மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் எங்கே போயிருக்குமென யூகிக்க முடிகிறதா? அமெரிக்காவில் இருக்கிற தீவு மிட் வேயில் அல்பட்ராஸ் என்கிற கடற்பறவை இனம் வசிக்கிறது. அவை கடலில் நெடுந்தூரம் பறந்து, பறந்து தன் குஞ்சிற்கு உணவை எடுத்து வந்து ஊட்டுகிறது. 90 நாள்களே ஆன, அந்தப் பறவைக் குஞ்சு உணவை உட்கொள்கிறது. சி...
துபாயில் துப்புரவு தொழிலாளி வேலை செய்யும் இளைஞர் அலி மக்பூல்(வயது-27) பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 15 கிலோ தங்கம் அதாவது சுமார் 2.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள பையை கீழே கிடந்து கண்டெடுத்தார். இதையடுத்து அந்த பையை துபாய் சாலை போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைத்தார். என் தந்தை எனக்கு சொல்லி கொடுத்த எதையும் எப்பொதும் நான் மறக்கவில்லை என்று கூறினார். உன்னுடைய வருமானம் நேர்மையான மூலங்களிலிருந்து கிடைத்ததா என்பதை உறுதிப்படுத்திக் கொள் என்று எனது தந்தை எப்போதும் கூறுவார் என்று அவர் தெரிவித்துள்ளார். மாக்பூலை அண்மையில் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் Al Sabkha நேரில் அழைத்து கவுரவித்தார் என்று மேலும் தெரிவித்துள்ளார். எனக்கு வழங்கிய மரியாதைக்கு நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். நான் எனது கு டும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் அதிகாரிகளின் பேஸ்புக்கில் செய்திகளைப் பகிர்ந்தேன் எல்லோரும் என்னை வாழ்த்தினார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது என்று நான் என் தந்தையிடம் சொன்னபோது, நான் சரியானதைச் செய்தேன், அவர் என...
குவைத்தில் இந்திய தூதரகம் தங்கள் அதிகாரபூர்வ இந்திய அரசின் வலைத்தள பக்கத்தில் ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது இந்த தகவல் தற்போது குவைத்தில் உள்ள பல செய்தி தளங்கள் செய்தியாக பதிவு செய்துள்ளது. குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பல இந்திய தொழிலாளர்கள் போலியான ஏஜென்சிகள் இடைத்தரகர்கள் மற்றும் இல்லாத வளைகுடா நாடுகளில் இல்லாத மற்றும் மூடப்பட்ட உள்ள பல்வேறு நிறுவனங்கள் பெயரில் மேலும் பல்வேறு வழிகளில் போலியான வேலை வாய்ப்புகள் சம்மந்தமான அழைத்து வந்து ஏமாற்றப்படுவதுடன், பல்வேறு சித்திரவதை மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் செய்திகள் அன்றாடம் பார்க்கிறோம். இந்நிலையில் குவைத்தில் சமீபகாலத்தில் 200 ற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் இவ்வாறான அழைத்து வரப்பட்டு, சில தினங்களுக்கு முன்பு 72 இந்திய தொழிலாளர்கள் தவித்து வருவது வரையில் பல பிரச்சனைகள் இந்திய தூதரகம் மற்றும் குவைத் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மேற்பார்வை உள்ள மற்றும் தீர்வு காணவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ...
Comments
Post a Comment