Posts

Showing posts from June, 2019

துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவது தானாகவே இயங்கும் முறை.

Image
துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவது தானாகவே இயங்கும் முறைக்கு மாறிவிட்டதாகவும்,              ஸ்மார்ட் கார்களில் உள்ள கேமிராவும், சென்சாரும் தான் நம்முடைய டிரைவிங் டெஸ்டை தீர்மானிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த ஒரு ஆண் கத்தாரில் மரணம்!

இலங்கை அம்பாறை மாவட்டம்  பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும் கோட்டைக்கல்லாற்றை வசிப்பிடமாகவும்.கொண்ட பொன்னுத்துரை குலேந்திரன் (51) நேற்று 27 ஆம் திகதி கத்தாரில் மரணமானார். வேலைக்கு சென்று வந்து தூங்கியவர் மறுநாள்சடலமாக  தங்குமிடத்தில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கத்தார் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குவைத்தில் வேலைக்கு வரும் இந்திய தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டிய கம்பெனிகள் மற்றும் இந்திய ஏஜென்சிகள் பட்டியல் விபரங்கள்:

Image
குவைத்தில் இந்திய தூதரகம் தங்கள் அதிகாரபூர்வ இந்திய அரசின் வலைத்தள பக்கத்தில் ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது  இந்த தகவல் தற்போது குவைத்தில் உள்ள பல செய்தி தளங்கள் செய்தியாக பதிவு செய்துள்ளது.               குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பல இந்திய தொழிலாளர்கள் போலியான ஏஜென்சிகள் இடைத்தரகர்கள் மற்றும் இல்லாத வளைகுடா நாடுகளில் இல்லாத மற்றும் மூடப்பட்ட உள்ள பல்வேறு நிறுவனங்கள் பெயரில் மேலும் பல்வேறு வழிகளில் போலியான வேலை வாய்ப்புகள் சம்மந்தமான அழைத்து வந்து ஏமாற்றப்படுவதுடன், பல்வேறு சித்திரவதை மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் செய்திகள் அன்றாடம் பார்க்கிறோம்.            இந்நிலையில் குவைத்தில் சமீபகாலத்தில் 200 ற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் இவ்வாறான அழைத்து வரப்பட்டு, சில தினங்களுக்கு முன்பு 72 இந்திய தொழிலாளர்கள் தவித்து வருவது வரையில் பல பிரச்சனைகள் இந்திய தூதரகம் மற்றும் குவைத் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மேற்பார்வை உள்ள மற்றும் தீர்வு காணவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.       ...

குவைத்தில் இலங்கை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

Image
குவைத்தில் இலங்கை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.Saad Al-Abdullah பகுதியில் முதலாளி (Sponsor) யின் வீட்டில் வைத்து தன்னைத்தானே தீ வைத்து கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்மணி Jahra மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும் ஆனால் அதிகளவில் தீக்காயங்கள் ஏற்பட்டதால் மரணமடைந்தார் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துயரமான செய்தியை குவைத்தின் பிரபலமான தினசரி நாளிதழ் Al-abha செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. தற்கொலை செய்த பணிப்பெண் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் செய்தியில் குறிப்பிடவில்லை.இது கொலையா.....?? அல்லது தற்கொலையா.... என்பது அந்த கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்.